
ஜாமக்கோள் ஆருடம்
ஜாமக்கோள் ஆரூடம் என்பது நிமிடங்களால் கணக்கிடப்படுகிறது.
5 நிமிடத்திற்கு | 1 ஆரூடம் |
1 மணி நேரத்திற்கு | 12 ஆரூடம் |
12 ஆரூடத்தில் | 12 ராசிகள் வரும் |
1) ஜாமக்கோள்பிரசன்னம்
******************************
பாடத்திட்டம்.
1.. ஜாமக்கோள் ஆருடம் ஓர் அறிமுகம்
2. ராசி காரகத்துவம்
3. கிரக காரகத்துவம்
4. பாவ காரகத்துவம்
( இவைகள் அனைத்தும் பாரம்பரிய முறையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்)
5. ஆருடம்
6. உதயம்
7. கவிப்பு
8. ஜாமக்கோள் நேரம்
9. ஜாமக்கோள் கிரக வரிசை
10. ராசிகளின் கதிர்கள்
11. கிரக கதிர்கள்
12.சிரோரதயம் பிருஷ்டோதயம்
சிர பிருஷ்டோதயம்
13. அன்றைய கோச்சார நிலை
14. கௌரியின் பங்கு
15. துணைக் கோள்களின் நிலை( ராகு காலம் எமகண்டம்
ம்ருத்யு போன்றவை)
16. ஹோர
17.ஜாமகோள் ஆருடத்திற்கு என்று உள்ள சில பொதுவான முக்கிய விதிகளை பார்ப்போம்.
18.உள் வட்ட வெளி வட்ட
கோள்களின் ஆய்வு
19.பாதகதிபதி நிலை
20. கால நிர்ணயம்
இதற்கு பிறகு பலன் கூறும் முறை/ விதிகள்.
ஆருடம் அறிவோம்...!
ஆரூடம் என்பது
நிமிடங்களால் கணக்கிடப்படுகிறது.
5 நிமிடத்திற்கு 1 ஆரூடம்
1 மணி நேரத்திற்கு 12 ஆரூடம்
12 ஆரூடத்தில் 12 ராசிகள் வரும்
ஆரூடமே அதீத பலம்.
ஜாதகம் கேட்க வந்தவர்
ஏறி(வந்து) நின்ற நிமிடத்தை
ஆரூடம் காட்டும்.
ஆரூடம் 1 ராசியை 5 நிமிடத்தில் கடக்கும்
.1 ராசிக்கு 9 பாதம்.
ஆரூடம் 1 பாதம் கடந்து செல்ல
33 செகண்டு எடுத்துக்கொள்கிறது.
பிரசன்னத்தில் ஆரூடம்
மிகவும் முக்கியமானவை.
ஆரூடத்தை நிர்ணயம் செய்தால்தான்
கேள்வியின் பலனை
நிர்ணயம் செய்ய முடியும்.
உதாரணம்:
7 மணி 23 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால்
அது சிம்ம ஆரூடம்.
3 மணி 19 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால்
அது கடக ஆரூடம்.
5 மணி 57 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால்
அது மீன ஆரூடம்.
1)ஆருடம் என்பது அதீத பலம்
அதீதம் என்றால்
மிகுந்த பலம் என்று பொருள்
2)கடந்த காலங்களில் ஒரு சம்பவம் நடந்த
காரணங்களை அறிய பயன்படும்.
3)5 நிமிடம் கொண்ட கால அளவு
ஒரு ஆருடம் ஆகும்
4) உதாரணம் காலை நேரம்
10.23 என்றால் சிம்ம ஆருடம் ஆகும்.
5) ஆருடம் கணிக்க
மணியை தள்ளிவிட்டு
நிமிடங்களை கணக்கில்
எடுத்துக் கொள்கிறோம்
இனி......
ஆருடம் வைத்து பலன் சொல்லும் முறை
1)வந்த ஜாதகர் என்ன கேள்வி என்று அவர்
கேட்காமலே அதை ஊகிக்க முடியும்.
ஆருடத்தில் உள்ள கிரக சம்பந்தமான
கேள்வி.
ஆருடத்தில் கிரகங்கள் இல்லை என்றால்
ஆருட அதிபதி சம்பந்தமான கேள்வி
ஆக ஆரூடத்தில் உள்ள
கோச்சார கிரகங்களை வைத்து
பலன் சொன்னால்
60 சதவிகிதம் வரை சரியாக வரும்
2 )அடுத்து ஆருடத்திற்கு 1 ,5 ,9 - ல்
உள்ள கிரகங்கள் சம்பந்தமான
கேள்வி ஆகவும் இருக்கலாம்
3)ஆருடம் ராகுவை கடந்து வந்தால்
கஷ்டங்களை சந்தித்து வந்திருக்கிறார்
என்று அர்த்தம்
4)உதயத்தில் இருந்து ஆரூடம்
எத்தனையாவது பாவத்தில் உள்ளது
என்பதை வைத்து பலன் கூற முடியும்.
ஜாமக்கோள்
*********************
உதயம் கணிப்பு பற்றிய
ஒரு விரிவான விளக்கம்.
பகல் அகஸ் அதாவது
பகல் பொழுதின் நீளம் காணல்
*************************************
ஆவணி மாதம் 5 - ஆம் நாள்
அன்று சூரிய உதயம் 6 : 16. AM
அன்றைய சூரிய அஸ்தங்கம் 6 : 35. PM
இந்த சூரிய அஸ்தமன நேரத்தை
6 : 35. ஐ இரயில்வே நேரமாக
மாற்றவேண்டும் [18 : 35] வரும்.
அதனுடன் சூரிய உதயத்தை
6 : 16. ஐ கழிக்க வேண்டும்.
பகல்அகஸ்=
சூரியஅஸ்தமனம்=
சூரியஉதயம்=
18 : 35 - 6 : 16 = 12 :19 மணி
இதை நிமிடங்களாக்க
(12 × 60) + 19 = 729 + 19 = 739. நிமிடங்கள்.
ஒரு ராசியின் அளவு காணல்
***********************************
உதயம் பகலில் 12 - ராசிகளில் செல்லும்
என்பதை கண்டோம். எனவே மேற்கண்ட
நிமிடங்கள் - 739.
ராசிகள் - 12.
739 / 12 = 61. 58 = 62. நிமிடங்கள்.
எனவே ஆவணி மாதம் 5 - ஆம் நாள் அன்று
லக்கினம் ஒரு ராசியை கடக்க
62 - நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
லக்கினம் கடந்தது மற்றும்
இருப்பு காணல்.
*********************************
சூரியன் ஒரு ராசியில்
ஒரு மாதம் பயணிப்பார்
ஆவணி மாதம் முழுவதும்
சூரியன் சிம்மத்தில் இருப்பார்.
ஒரு நாளைக்கு ஒரு பாகை கடப்பார்
எனவே ஆவணியின்
மொத்த நாட்களான 31 - நாட்களில்
30 - பாகையை கடப்பார்.
ஆவணி 4 - ஆம் நாள் வரை
சூரியன் கடந்த பாகையே
லக்கினத்தில் கடந்தது
எனவே லக்கினம் சிம்மத்தை
31 - நாட்களில் கடப்பதால்
ஒரு நாளில் லக்கினம் தரும் நேரம்.
62 / 31 = 2. நிமிடங்கள்
எனவே ஒவ்வொரு நாளும்
லக்கினம் 2 - நிமிடங்கள் நகருகிறது.
ஆவணி 4 - ஆம் நாள் வரை கடந்தது
4 × 2 = 8. நிமிடங்கள்.
ஆவணி 5 - ஆம் நாள் அன்று
சிம்மத்தில் லக்கின இருப்பு
62 - 8 = 54. நிமிடங்கள்.
உதய லக்கினம் காணல் :
********************************
கேள்வியாளர் வந்தது - மதியம் 2 : 43.
சூரிய உதயம். 6 : 16
சிம்மத்தில் இருப்பு 0 : 54
--------------
7 : 10
0 : 62
---------------
கன்னி முடிவு. 8 : 12
0 : 62
----------------
துலாம் முடிவு. 9 : 14
0 : 62
----------------
விருச்சிகம் முடிவு 10 : 16
0 : 62
------------------
தனுசு முடிவு. 11 : 18
0 : 62
---------------------
மகரம் முடிவு. 12 : 20
0 : 62
----------------------
கும்பம் முடிவு. 13 : 22
0 : 62
--------------------
மீனம் முடிவு. 14 : 24
0 : 62
----------------------
மேஷம் முடிவு. 15 : 26
எனவே உதய லக்கினம் மேஷம்.
ஒவ்வொரு ராசிக்கும்
62 - நிமிடங்கள் கூட்ட கூட்ட
அந்த ராசியின்
உதய நேரம் முடிவு கிடைக்கும்.
இந்த கணக்கை மிக ரத்தினசுருக்கமாகவும்
ஏற்கனவே படத்தில் பார்த்தோம்.
சில தெளிவான விஷயங்களுக்காக
விரிவாக போடப்பட்டது
உதய பலன்கள் காணும்போது
உதயத்தை வைத்து
நிகழ்காலம் குறித்தும்
உதயத்தில் நிற்கும் கோளை வைத்து
எதிர்காலம் குறித்தும்.
உதயாதிபதியின் நிலையை வைத்து
கேள்வியாளரின்
நிலையை குறித்தும் அறியலாம்.
மேலும்
உதயாதிபதி நின்ற பாவம்
தொடர்பான விஷயங்கள் நடக்க
கேள்வியாளர் வேண்டும் விரும்புகிறார்.
உதயத்தில் நிற்கும் கிரகம்
அல்லது
அதன் ஆதிபத்தியம்
தொடர்பான விஷயங்கள்
தானாகவே நடக்கப்போகின்றன.
அல்லது
கிடைக்கப்போகின்றன என்பதாகும்.
ஜாமக்கோள்
*********************
கவிப்பு பற்றிய எளிய விளக்கம்.
*************************************
ஏற்கனவே நாம் பார்த்த அட்டவணைப்படி
சூரியன் இருக்கும் ராசியை வைத்து
சூரியவீதி அறியப்படுகிறது.
ஆரூடத்திலிருந்து
வீதி வரை
எண்ணி வந்த எண்ணிக்கையை
உதயம் முதல்
எண்ணிப்போட வருவது கவிப்பு.
மேஷவீதி என்றால்
ஆரூடத்திலிருந்து மேஷம் வரை
எண்ணவேண்டும்
ரிஷபவீதி என்றால்
ஆரூடத்திலிருந்து ரிஷபம் வரை
எண்ணவேண்டும்
மிதுனவீதி என்றால்
ஆரூடத்திலிருந்து மிதுனம் வரை
எண்ணவேண்டும்
உதாரணமாக : (1)
*********************
ஜாமக்கோள் பிரசன்ன ஜாதகத்தில்
ஆரூடம் - கும்பம்
உதயம் - விருச்சிகம்
சூரியன் - தனுஷில்.
என்றால் கவிப்பு என்ன ராசியாக வரும்...?
சூரியன் இருப்பது தனுஷில்
ஆகவே அது மிதுனவீதியாகும்.
எனவே
ஆரூடம் கும்பம் ராசி முதல்
மிதுனராசி வரை எண்ணவருவது 5.
எண்ணி வந்த இந்த 5 - எண்ணிக்கையை
உதயம். விருச்சிகம் முதல் எண்ண வருவது
மீன ராசியாகும்.
இந்த மீன ராசியே கவிப்பு ராசியாகும்
உதாரணமாக : (2)
********************
ஆரூடம் - கும்பம்
உதயம் - விருச்சிகம்
சூரியன் - மீனத்தில்.
கவிப்பு.......என்ன ராசி....?
சூரியன் மீனத்தில் இருப்பதால் வீதி.....
ரிஷப வீதி ஆகும்
ஆரூடம் கும்பத்திலிருந்து
ரிஷபம் வரை எண்ண வருவது 4.
எண்ணி வந்த இந்த 4 - எண்ணிக்கையை
உதயம் விருச்சிகம் முதல் எண்ண வருவது
கும்ப ராசியாகும்
இந்த ஆரூடம் நின்ற கும்ப ராசியே
கவிப்பு அமைந்த ராசியும் ஆகும்
ஆக ஆரூடம் - கவிப்பு ஒரே கும்பராசி
சூரியனை வைத்து
வீதியை தெளிவாக அறிந்து கொண்டால்
கவிப்பை
நாம் கீழ்வரும்படி அமைக்கலாம்.
ஆரூடத்திலிருந்து 1 - வது ராசி எனவே
உதயத்திற்கு 1 - ல் கவிப்பு வரும்
ஆரூடத்திலிருந்து 2 - வது ராசி எனவே
உதயத்திற்கு 2 - ல் கவிப்பு வரும்
ஆரூடத்திலிருந்து 3 - வது ராசி எனவே
உதயத்திற்கு 3 - ல் கவிப்பு வரும்
இதன்படியே 12 - வரை எண்ணி வர
ஆரூடத்திலிருந்து - கவிப்பு ராசி வரும்
ஜாமக்கோள்
********************
ஜாமக்கோள் ராசியில் அமைக்கும் முறை
********************************************
இராசிகள் - 12.
அவைகள் - சரம் ஸ்திரம் உபயம் என்று
மூன்றுவகைகளாக பிரிக்கப்படுகின்றன.
ஆனால்
ஜாமக்கோள் பிரசன்னத்தில்
ராசிகளின் திக்குகள் - 8 .
ஜாமங்கள் - 8 .
ஜாமக்கோள்களும் - 8 .
ராசிகளின் திக்குகள் : (8)
******************************
கிழக்கு - மேஷம். ரிஷபம்
தென்கிழக்கு - மிதுனம்
தெற்கு - கடகம்.சிம்மம்
தென்மேற்கு - கன்னி
மேற்கு - துலாம். விருச்சிகம்.
வடமேற்கு - தனுசு
வடக்கு - மகரம். கும்பம்
வடகிழக்கு - மீனம்
ஜாமக்கோள்கள் :
************************
கதிர் எனில் சூரியன் : ஞாயிறு
சேய் எனில் செவ்வாய் : செவ்வாய்
பொன் எனில் குரு : வியாழன்
மால் எனில் புதன் : புதன்
புகர் எனில் சுக்கிரன் : வெள்ளி
மதி எனில் சந்திரன் : திங்கள்
மந்தன் எனில் சனி : சனி
பாம்பு எனில் ராகு/ கேது :
கிழமை இல்லை
பிரசன்னம்
எந்த கிழமையில் பார்க்கிறோமோ
அந்த கிழமைக்கு அவரே நாயகன்
ஆகிறார்
பிரசன்னம் பார்த்த நாளின் அதிபதி
பிரசன்னம் பார்த்த நேரத்தின்
ஜாமத்தை ஆளுகிறார்
இவர்கள் எட்டுத் திக்கும் ஆளும்
அஷ்டதிக்கு ஸ்வரூபம் ஆவார்கள்.
முதல் ஜாமத்தின்
அதிபதி - சூரியன்
இரண்டாம் ஜாமத்தின்
அதிபதி - செவ்வாய்
மூன்றாம் ஜாமத்தின்
அதிபதி - குரு
நான்காம் ஜாமத்தின்
அதிபதி - புதன்
ஐந்தாம் ஜாமத்தின்
அதிபதி - சுக்கிரன்
ஆறாம் ஜாமத்தின்
அதிபதி - சனி
ஏழாம் ஜாமத்தின்
அதிபதி - சந்திரன்
எட்டாம் ஜாமத்தின்
அதிபதி - பாம்பு
இவ்வாறு 12 - மணி நேரத்தை
எட்டு ஜாமமாக பிரித்து ஆளுகின்றனர்
1)
12 - மணி நேரத்தை
எட்டாக பிரிக்கப்பட்டுள்ளது
2)
அந்த எட்டு ராசிகளில்
கிரகங்களை எதிர் வரிசையில்
ஜாமக்கிரகங்கள் நிரப்பப்ப்டுள்ளது
ஜாமக்கோள் அடைவின் போது
சூரியனுக்கு நேர் ஏழில்தான்
சுக்கிரன் அமையும்
செவ்வாய்க்கு நேர் ஏழில்தான்
சனி அமையும்
குருவிற்கு நேர் ஏழில்தான்
சந்திரன் அமையும்
புதனிற்கு நேர் ஏழில்தான்
பாம்பு அமையும்.
ஜாமங்கள் :
******************
6 - 7 : 30 - மீனம்
7 : 30 - 9 - மகரம்
9 - 10 : 30 - தனுசு
10 : 30 - 12 - துலாம்
12 - 1 : 30 - கன்னி
1 : 30 - 3 - கடகம்
3 - 4 : 30 - மிதுனம்
4 : 30 - 6 - மேஷம்
12 - மணி நேரத்தை
எட்டாக பிரிக்கப்பட்டுள்ளது
இந்த 8 - ஜாமங்களை
12 - ராசிகளுக்குமாக பிரிக்கவேண்டும்
இந்த அட்டவணையே
இரவிற்கும் பொருந்தும்
அதாவது மாலை 6 - மணி முதல்
மீண்டும் ஜாமக்கோள் நேரமாகும்
மாலை 6 - மணியிலிருந்து
இரவும் சேர்த்து மறுநாள்
காலை 6 - மணி வரையிலும்
இந்த அட்டவணை பொருந்தும்
அவற்றில் ராசியில்
ஸ்திர ராசி என்பது
நகராத தன்மையுடையது
ஜாமக்கோள்கள் என்பது
எப்போதும்
நகர்ந்து கொண்டேயிருப்பதால்
அவைகள் ஸ்திர ராசியில் நிற்காது
என்பதாக கொண்டு
நான்கு ஸ்திரராசிகளான
மகரம் - விருச்சிகம் - சிம்மம் - ரிஷபம்.
ராசிகளையும் தள்ளிவிடலாம் எனவே
ஜாமங்களும் - ஜாமக்கோள்களும்
சரம் மற்றும் உபயம் ராசிகளில்
மட்டுமே அமையும்
முதல் ஜாமமான 6 - 7 : 30. என்பது
மீனத்தில் தொடங்கி.....
ராகுகேதுக்களைப் போல்
அப்பிரதட்சணமாக
மேஷம் வரை செல்லும்
அதில் ஸ்திர ராசியில்
ஜாமங்கள் அமையாது
ஜாமக்கோள்கள்
காலை 6 - மணிக்கு 360 - பாகையில்
ரேவதி 4 - ஆம் பாதம் தொடங்கி
அப்பிரதட்சணமாக
பின்னோக்கி நகர்ந்து
ஒவ்வொரு பாதமாக பயணிக்கும்
அவ்வாறாக ஸ்திர ராசிகளிலும்
பயணிக்கும் ஆனால்
ஸ்திரராசிகளில் ஜாமங்களும்
ஜாமக்கோள்களும் அமையாதது போல
தோன்றினாலும்
ஸ்திரத்திற்கான 30 - பாகைகளை
சரத்திற்கும் உபயத்திற்குமாக
பகிர்ந்தளித்து சரம் உபயம் என
ஸ்திர ராசிகள் செயல்படும்
அன்றைய கிழமையின் அதிபதியே
முதல் ஜாமமான 6 - 7 : 30 மணிக்கு
அதிபதியாக வருவார்
அவர் அப்பிரதட்சணமாக பின்னோக்கி
நகர்ந்து தற்போது நடக்கும் ஜாமத்தை
ஆளுகின்ற கிரகமாக வரும்
எனவே கேள்வி எழும் நேரம் என்னவோ
அந்த நேரத்திற்குண்டான ஜாமத்தில்
அந்த கிழமை அதிபதியை எழுதி
பின்னர் வரிசைக்கிரமாக
மற்ற கிரகங்களை எழுத வேண்டும்.
ஜாமக்கோள்
*****************
இராகு காலம்
^^^^^^^^^^^^^^^^
இராகு காலம் என்பது
ஒரு கிழமையின்
முதல் ஜாம கிரக வரிசைப்படி
பாம்பு எங்கு அமர்ந்துள்ளதோ
அந்த நேரமே
அன்றைய நாளின்
இராகு காலம் எனப்படும்
உதாரணமாக :
வெள்ளிக்கிழமை அன்று
முதல் ஜாமத்திற்கு
பாம்பு துலா இராசியில் உள்ளது
ஆகவே நேரம் 10:30 -12 மணி ஆகும்
ஜாமக்கோள் நேரத்திற்காக
அன்றைய இராகு கால நேரம் மாறாது
இன்னொரு உதாரணமாக :
ஞாயிற்றுக்கிழமையின் முதல் ஜாமப் படி
4:30 - 6 இராகு காலமாகும்
ஞாயிற்றுக்கிழமையில் மீனத்தில்
சூரியன் முதல் ஜாமத்தில் இருப்பார்
அப்போது பாம்பு மேஷத்தில் இருக்கும்
எமகண்டம்
************
எமகண்டம் என்பது
எதிர்மறையான பலன்களைத்
தருவதை காட்டும்
உதாரணமாக :
எமகண்டம் குறிக்கும் நேரம்
6 - 7: 30 மீனம் வியாழன்
7:30 - 9 மகரம் புதன்
9 - 10:30 தனுசு செவ்வாய்
10:30 - 12 துலாம் திங்கள்
12 - 1:30 கன்னி. ஞாயிறு
1:30 - 3 கடகம் சனி
3 - 4:30 மிதுனம் வெள்ளி
4:30 - 6 மேஷம்