
திருமண பொருத்தம்
திருமண பொருத்தம் என்பது இரு மணங்கள் ஓன்று கூடி இல்லறத்தை சிறப்புடன் வாழ்வது ஆகும். அப்படி பட்ட திருமண வாழ்க்கை யானது சில வழிகளில் தீர்மானிக்கப்படுகிறது.
- காதல் திருமணம்
- பெற்றோர்களால் நிச்சயப்படுத்துவது
முற்காலத்தில் ஒரு ஆண் ஜாதகம் (ம) பெண் ஜாதகத்தை கொண்டு அதில் உள்ள நிறை மற்றும் குறைகளை ஆராய்ந்து திருமண பந்தத்தை திர்பானிப்பார்கள். அப்படி தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை கடைசி வரைக்கும் நல்ல முறையில் (குறை மற்றும் நிறை) அனுசரித்து வாழ்ந்து வந்தார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக பெயர் பொருத்தம், மண பொருத்தம் வைத்து திருமண பந்தங்களை இணைத்தர்கள் இதில் சில கருத்து வேறுபாடு இருந்தது. தற்போது திருமண பொருத்தம் என்ற பெயரில் தசவித பொருதங்களை மட்டும் பார்க்கப்படுகின்றன. இதனால் திருமண பந்த முரிவு ஏற்படுகின்றன.
திருமண பந்தங்களை இணைக்கும் போது சில வழிமுறைகளை கையாள வேண்டும் அவை.
- திருமணம் சார்ந்த தோஷம்
- பாவக ரீதியான ஆய்வு
- நட்சத்திர ரீதியான ஆய்வு
- திசா ரீதியான ஆய்வு
திருமணம் சார்ந்த தோஷம்
- செவ்வாய் தோஷம்,
- சர்ப்ப தோஷம்
- கால சர்ப்ப தோஷம்
- சனி தோஷம்
- கிரக இணைவுகளால் ஏற்படும் தோஷம்
- களத்திர தோஷம்
- புத்திர தோஷம்
- விஷ கன்னிகா தோஷம்
- புனர்பூ தோஷம்
போன்ற தோஷங்களை ஆராய்ந்து இணைப்பது சிறப்பு.
பாவக ரீதியான ஆய்வு
பாவகம் மொத்தம் 12 உள்ளது இவற்றில் எந்த பாவகம் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை ஆராய்ந்து பலவீனம் உள்ள பாவகத்தை பலமுள்ள பவகமாக இணைப்பது சிறப்பு ஆகும்.
எ.கா ஆண் ஜாதகத்தில் குழந்தை பாவகம் பலவீனம் ஆனால் பெண் ஜாதகத்தில் பலம் இருந்தால் அவற்றை சரி செய்யும். பாவக ஆய்வு மிகவும் முக்கியம் ஆகும்.
நட்சத்திர ரீதியான ஆய்வு
இதனை தசவித பொருத்தம் என்றும் கூறுவர். பொதுவாக 10 பொருத்தம் பார்பார்கள். ஆனால் ஆதிகுரு ஜோதிடத்தில் நாடி பொருத்தத்தை சேர்த்து 11 பொருத்தம் பார்க்கப்படுகிறது.
- தினப்பொருத்தம்
- கணப்பொருத்தம்
- மகேந்திர பொருத்தம்
- ஸ்திரிதீர்க்க பொருத்தம்
- யோனிப் பொருத்தம்
- இராசிப் பொருத்தம்
- ராசி அதிபதி பொருத்தம்
- வசியப் பொருத்தம்
- ரஜ்ஜிப் பொருத்தம்
- வேதைப் பொருத்தம்
- நாடிப் பொருத்தம்
திசா ரீதியான ஆய்வு
பெண் ஜாதகத்தில் எந்த திசா புத்தி நடக்கிறதோ அதற்கு எதிரான திசா மற்றும் புத்தி ஆண் ஜாதகத்தில் நடக்காமல் இருப்பது சிறப்பு.